மோட்டோ இ 5 புதிய பயன்பாடுகளுடன் - Smarttamilzan

Cinima news Tech news Android gadgets Health Android apps & reviews

Friday, 2 March 2018

மோட்டோ இ 5 புதிய பயன்பாடுகளுடன்




மோட்டோரோலா நிறுவனம் எம்டபுள்யூசி 2018-நிகழ்ச்சியில் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யவில்லை, மேலும் ஏப்ரல் 3-ம் தேதி மோட்டோ இ5 மற்றும் மோட்டோ இ5 பிளஸ், மோட்டோ இ5 பிளே போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். மேலும் பட்ஜெட் விலையல் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
  • மோட்டோ இ5 பிளஸ் :

    மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.8-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆண்ட்ராய்டு :

    மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் அல்லது மீடியாடெக் எம்டி6757எக்ஸ் வசதியுடன் வெளிவரும். அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
  • நினைவகம்:

    இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது
  • கேமரா:

    இந்த மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இணைப்பு ஆதரவுகள்:

    வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
  • 5000எம்ஏஎச்:

    மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது
COMMERCIAL BREAK

No comments:

Post a Comment