T. ராஜேந்திரரின் புதிய கட்சி - Smarttamilzan

Cinima news Tech news Android gadgets Health Android apps & reviews

Wednesday, 28 February 2018

T. ராஜேந்திரரின் புதிய கட்சி



ன்று முக்கிய முடிவை அறிவிப்பதாக கூறி வந்தம டி.ராஜேந்தர், தனது லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயர் பலகையை திறந்து வைத்து தனது கட்சியை மீண்டும் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார்.
ஏற்கனவே கடந்த 1991ம் ஆண்டு  தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியை தொடங்கிய டி.ராஜேந்தர், அப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களை கைப்பற்றிய நிலையில்,  1996ல் கட்சியைக் கலைத்து விட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துகொண்டார்.
பின்னர் திமுகவில் தனக்கு மரியாதை இல்லை என்று கூறி, அங்கிருந்து வெளியேறி, மீண்டும் 2004ம் ஆண்டு  அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த கட்சி பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது ரஜினி, கமல் போன்றோர் கட்சி ஆரம்பித்து வரும் நிலையில், டி.ராஜேந்தரும் தனது கட்சி குறித்த பெயர் பலகையை இன்று திறந்த வைத்து, களத்தில் குதிப்பதாக அறிவித்து உள்ளார்.
இன்று திறக்கப்பட்டுள்ள லட்சிய திராவிட முன்னேற்றக்கழகம் என்ற பெயரி பலகையில், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். படங்களுடன் புதியதாக ஜெயலலிதாவின் படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment