நாச்சியார் டீம் கொண்டாடிய வெற்றி - Smarttamilzan

Cinima news Tech news Android gadgets Health Android apps & reviews

Wednesday, 28 February 2018

நாச்சியார் டீம் கொண்டாடிய வெற்றி

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார், இவானா மற்றும் பலர் நடித்த 'நாச்சியார் படம், கடந்த 16ம் தேதி வெளிவந்தது. பெரிய அளவில் வெற்றியையும், வரவேற்பையும் பெறவில்லை என்றாலும் சுமாரான வெற்றியைப் பெற்றதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், பாலாவின் முந்தைய படங்களைப் போல இந்தப் படம் எந்த ஒரு பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. மேலும், இந்தப் படம் சம்பந்தமாக பட வெளியீட்டிற்கு முன் எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் பாலா நடத்தவில்லை. படத்தைப் பற்றி மீடியாக்களில் யாரும் பகிரவும் இல்லை. அதுவே, படத்தின் வரவேற்புக்கு எதிராக அமைந்துவிட்டது. படம் வெளிவந்த பின்னும் யாரும் அது பற்றி பெரிதாகப் பேசவில்லை. இருந்தாலும் படம் பத்து நாட்களில் பத்து கோடி வசூலித்ததாகச் சொல்லி வருகிறார்கள்.

இதனிடையே, படத்தின் வெற்றியை 'நாச்சியார்' சம்பந்தப்பட்ட படக்குழுவினர் அவர்களுக்குள்ளாகவே குடும்பமாகக் கொண்டாடியிருக்கிறார்கள். இயக்குனர் பாலா அவரது மனைவி, ஜோதிகா அவரது கணவர் சூர்யா, ஜி.வி.பிரகாஷ் அவரது மனைவி சைந்தவி என அவர்களே 'நாச்சியார்' வெற்றியை விருந்து வைத்து கொண்டாடிக் கொண்டுள்ளார்கள்

No comments:

Post a Comment