நடிகை ஸ்ரீதேவி, துபாயில் மரணம் அடைந்தார். மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது என முதலில் செய்தி வெளியானது. ஆனால், தண்ணீர் தொட்டில் மூழ்கி உயிரிழந்தார் என துபாய் தடயவியல் போலீசார் அறிவித்துள்ளனர். தொடர்ந்து இறப்புக்கான சான்றும் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. இன்று நள்ளிரவு உடல் மும்பை வரும் தெரிகிறது.
இதனிடையே ஸ்ரீதேவி மறைவுக்கு, உருக்கமான இரங்கல் தெரிவித்திருந்த கமல், அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல மும்பை சென்றார். அனில் கபூரின் வீட்டில் உள்ள ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி, அனில் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

No comments:
Post a Comment