திராட்சை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
மற்ற திராட்சைகளை விட கருப்பு திராட்சை சாப்பிடுவது நல்லது.
கருப்பு திராட்சை சாப்பிடுவதால் மூளை நரம்புகளின் செயல்திறனை மேம்படுத்துகிறது. ஒற்றை தலைவலி மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்க கருப்பு திராட்சை உதவுகிறது.
கருப்பு திராட்சை மாரடைப்பு மற்றும் இதய கோளாறுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது மமற மற்றும் இதய தசைகளை வலிமையடைய செய்து இதய கோளாறுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் தடுக்கவும் கருப்பு திராட்சை உதவுகிறது.
கருப்பு திராட்சை சாப்பிடுவதால் கண் கருவிழியை பல்வேறு பாதிப்புகளில் இருந்து காக்கிறது. குருட்டுத்தன்மை ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. கருப்பு திராட்சையில் உள்ள ல்யூட்டின் மற்றும் ஜியாக்சேதின் கண் பார்வையை மேம்படுத்துகிறது.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உடலில் சர்க்கரை சமநிலையின்மை உள்ளது. இதனால் கணையத்தில் இன்சுலின் சுரப்பது பாதிக்கிறது. கருப்பு திராட்சை சாப்பிடுவதால் உடலில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.
கருப்பு திராட்சையில் எதிர் மியுட்டாஜெனட்டிக் மற்றும் எதிர் ஆக்ஸிஜனேற்றம் தன்மை உள்ளது. இவை புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. குறிப்பாக கருப்பு திராட்சை சாப்பிடுவதால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
நமக்கு அழகான தோற்றத்தை தருவது கூந்தல் ( முடி ) என்றால் மிகையாகாது. நம் தலையில் உள்ள நரம்புகளில் இரத்த ஓட்டம் சீராக பாய கருப்பு திராட்சை உதவுகிறது. கருப்பு திராட்சையில் உள்ள வைட்டமின் ஈ பொடுகு ஏற்படுவதை தடுக்கவும் உதவுகிறது.
No comments:
Post a Comment