விவேக் பேட்டி - Smarttamilzan

Cinima news Tech news Android gadgets Health Android apps & reviews

Thursday, 22 March 2018

விவேக் பேட்டி












ஜெயலலிதாவின் மரணம் மற்றும் கருணாநிதியின் உடல்நலம் ஆகியவை காரணமாக தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் இருப்பதாக கமல், ரஜினி உள்பட ப்லர் கூறி வருகின்றனர். ஆனால் ஏற்கனவே அரசியலில் உள்ள ஸ்டாலின் , வைகோ, சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தமிழக அரசியலில் வெற்றிடமே இல்லை என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக்,  தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கின்றதா? இல்லையா? என்பது தமக்கு தெரியாது என்றும் அப்படி ஒருவேளை வெற்றிடம் இருப்பதாக தெரியவந்தால், அந்த வெற்றிடத்தில் மரக்கன்றுகளை நடுவேன் என்றும் அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.
இன்று உலக வனநாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுவதை அடுத்து நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் நகைச்சுவை நடிகர் விவேக் கலந்து கொண்டார். தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் உரையாடிய விவேக் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் வெற்றிடம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த விவேக், 'தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதா என்பதற்கு நான் கருத்து கூறமாட்டேன். ஆனால் வெற்றிடம் இருப்பதாக எனக்கு தெரிய வந்தால் உடனே அங்கு மரக்கன்றுகளை நடுவேன் என்றும் நகைச்சுவையாக தெரிவித்தார்

No comments:

Post a Comment