சியோமி ரெட்மீ 5 ஆனது பிளாக், கோல்ட், ரோஸ் கோல்ட் மற்றும் லேக் ப்ளூ ஆகிய வண்ண மாறுபாடுகளில் வெளியாகியுள்ளது. விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.7999/-க்கு இந்திய சந்தையில் (பிரத்யேகமாக அமேசான் தளத்தில்) வாங்க கிடைக்கும்.
மறுகையில் உள்ள 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.8999/-க்கும் மற்றும் இறுதி மாறுபாடான 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.10,999/-க்கும் இந்தியாவில் (பிரத்யேகமாக அமேசான் தளத்தில்) வாங்க கிடைக்கும்.
சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவி 1440 x 720 பிக்சல்கள் என்கிற அளவிலான தீர்மானம், 18: 9 என்கிற திரை விகிதம் மற்றும் 450நிட்ஸ் பிரைட்னஸ் லெவல்ஸ் கொண்ட ஒரு 5.7 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
க்வால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி உடனாக 2ஜிபி / 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி / 32 ஜிபி மற்றும் 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ள இக்கருவி துரதிருஷ்டவசமாக அதன் பேட்டரித்திறனை 3300எம்ஏஎச் என்று குறைந்துக்கொண்டுள்ளது.
ஒருகையில் பேட்டரித்திறன் குறைக்கப்பட்டாலும், மறுகையில் ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் ஆனது ஒரு சக்தி திறன் மிகுந்த சிப்செட் ஆக பணியாற்றும் என்பதில் சந்தேகமில்லை. முன்னர் வெளியான சியோமி ரெட்மீ 4 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது சுமார் 800 எம்ஏஎச் அளவிலான பேட்டரித்திறன் குறைக்கப்பட்டுள்ளது.
கேமராத்துறையை பொறுத்தமட்டில், ரெட்மீ 5 ஆனது எப் / 2.2 துலையுடனான 12எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. இது சிறந்த செயல்திறனை வழங்குவதாகக் கூறப்படுகிறது. முமுன்பக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5எம்பி சென்சார் உள்ளது.
கைரேகை ஸ்கேனர் இரட்டை சிம் ஸ்லாட் மற்றும் ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழங்கும் ரெட்மீ 5 ஆனது ரெட்மீ நோட் 4 போன்றே இந்திய நுகர்வோர்களை பெரிதளவில் கவர்ந்து மற்றொரு பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போனாக உருவெடுக்கும் என்று நம்பப்படுக
பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் ஒன்று பொறுத்த பட்டுள்ளது
No comments:
Post a Comment